Wednesday, December 8, 2010

மயில்பாட்டு

தனக்கான பாடல் இல்லாத வருத்தம் தீராமல் அவனின் இனக் கும்பலோர் இறப்பதாக கனவொன்று கண்ட குமரேசன், பாடல் இயற்றிக் கொண்டிருந்தான்.காம தீர சர்வஞான பாடலாக இருக்க வேண்டிய கட்டாயமும், மெட்டுமில்லாததாலும் உருவாவது சிரமாக இருந்தது.அதை விட முக்கியம் கும்பலின் தலைவருக்கும் பிடித்திருக்க வேண்டும்.நடுகற்கள் துவங்கி மாவீரர் துயிலுமிடம் வரையும் , ஆநிரை கவர்தல் முதல் அன்னிய வணிகம் வரையும் குறிப்பெடுத்து வைத்திருந்தான் .இருந்தாலும்,இட்டுக்கட்ட பெருந்திணறல். நேற்று வந்த யவனதேசக் கப்பலின் மாலுமியிடம் , அந்துவஞ்சேரல் இரும்பொறை தனக்கு எழுதிய கடிதம் பற்றி ஃபுக்கோ சொல்லி அனுப்பியிருந்த ஒற்றை வார்த்தையிலிருந்து பாடல் பிரவாகமெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.


பாடலிபுத்திரத்தின் தென் கிழக்கே 200யோசனை தூரத்தில் இருக்கிறது டொமசீன.அசோகரின் படைகள் நகரை முற்றுகையிடும் வரை, அம்மனிதர்களைப் பற்றி துப்பெதுவும் தெரியாது. கடவுளின் குறியிலிருந்து பிடுங்கி வரப்பட்ட மரத்தை நடுவதற்காக , அங்கு வந்துள்ளதாக வேடமிட்டுச் சென்ற உளவாளி சொன்ன பின்பு தான் தெரியும், மார்பு வளர்ந்த ஆண்கள் மாத்திரமே இருப்பது.யாருடன் போரிடுவது என்று குழம்பிய அசோகன், ரயிலேறி அனைவரையும் திரும்பி வரச் சொல்லி விட்டான்.


"நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?" -- க்ளியோ ராகமிசைத்துப் பாடியதைக் கேட்ட அந்தோணி , சீசரை உயிர்பிக்க முடிவு செய்து , கிழக்கு திசையில் உள்ள தீவை நோக்கிப் பயணமானான். கடல் நடுவே பூத்துக் கிடக்கும் கொன்றை மரத்தினடியில் தவமிருக்கும் அடுத்த பிறவியிடம் தருமாறு கூறி ,சிறுநீரைக் கொடுத்தனுப்பினாள் க்ளியோ.


தேவராயன் சாமியராகி விட்டதாக ஊரெங்கும் செய்தி பரவிக் கொண்டிருந்த நேரமது.We the people of the Vijaya Nagaram, in order to form a more perfect union, establish injustice, insure domestic tranquility, provide for the common defense, promote the general welfare, and secure the blessings of liberty to ourselves and our posterity, do ordain and establish this Constitution for the Peoples Republic of Vijaya Nagaram. , இதுவே தேவன் எனக்கருளியதாகும். புணரும் போது இதை உச்சாடனம் செய்ய வேண்டும் , இது என் உத்தரவு.மறுப்பவனது பூளை அறுத்தெறியுங்கள். பெண்களின் மார்பகங்களை கிழித்தெறிந்து, தீபம் ஏற்றுங்கள். யோனிமலர்களை அய்ன்ஸ்டீனின் கால யந்திரத்துக்குள் திணித்து துரத்தியடியுங்கள்.குழந்தைகளின் கெண்டை நரம்பை வெட்டி விடுங்கள்.ஆப்பிள் பழம் மட்டுமே சாப்பிடுங்கள்.


பிதாகரஸ் தேற்றம் :

[a+b]2 = a2+b2- 2ab

"ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கம் அதன் மற்ற மூன்று பக்கங்களின் வர்க்கத்தின் கூட்டுத் தொகைக்குச் சமமாகும்."

கொங்குநாட்டு கும்மாங்குத்து

உள்ளூர் கோவில் திருவிழா என்றாலே ... தமிழ்நாட்டுக் கிராமத்தை கனவிலும் கண்டிராத நகர்ப்புற வாசிகளுக்கு நினைவுக்கு வரக் கூடிய ஒன்று..... வண்ணக் காகிதங்கள் கட்டி... தொப்புள் தெரிய தாவணியும்... ஒரு இன்ச் தடிமனுக்கு மேக்கப் இட்ட பெண்டிரும்... பஞ்சகச்சம் வேட்டி கட்டி தலைப்பகை கட்டிய ஆண்களும் சூழ கதாநாயகனும் கதாநாயகியும் தங்கள் காதலைத் தெரிவித்தோ... அல்லது காதலை எப்படியாவது கரை சேர்த்துவிடு தாயே என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டோ பாடிக் குத்தும்... கும்மாங் குத்து ஆட்டம்...

ஆனால் யதார்த்தம் அப்படியா... இதோ உங்களுக்காக... கொங்கு நாட்டின் ஒரு சிறு கிராமத்தில் கோவில் சாட்டி... பூக்கம்பம் நட்டு... அதை சுற்றி ஆடும் ஒரிஜினல் கொங்கு கிராமத்து ஆட்டம்...


பறவைகள் உலகம்

எல்லாப் பறவைகளுமே
கழுகின் கண்ணும்
கிளியின் மூக்கும்
மயிலின் தோகையும்
தேடி ஓடுகின்றன...

குயிலின் குரலை
வாங்கிய சேவலொன்று
படியேறி வந்து புலம்பியது
நல்ல டிமாண்ட் சார், ரேட் தான் ஜாஸ்தி


பறக்க ஆசை தான்...

பறப்பது பற்றி பேசும் போதெல்லாம்
றெக்கை குறித்து
விளக்க வேண்டியிருக்கிறது..

உயரம் கூறும் போது தான்
கவலை கொள்கின்றன

இந்த பறவைகள்
இட்ட முட்டைகள்
இங்கே தான் இருக்கின்றன...

ரைட்டும் லெப்ட்டும்
ஸ்ட்ரைட்டுமே திசைகளாய்
பதிக்கப்பட்ட குஞ்சுகள் உறையும்
அக்மார்க் முட்டைகள்...

றெக்கைக்கு உறையிட்டு வெளி வந்த குஞ்சொன்று
பைக் உதைத்துக் கடந்தது

நிறமற்ற நாயும் பின் சென்றது.....

வெல்க தமிழ்

வெல்க தமிழ்