Wednesday, December 8, 2010

கொங்குநாட்டு கும்மாங்குத்து

உள்ளூர் கோவில் திருவிழா என்றாலே ... தமிழ்நாட்டுக் கிராமத்தை கனவிலும் கண்டிராத நகர்ப்புற வாசிகளுக்கு நினைவுக்கு வரக் கூடிய ஒன்று..... வண்ணக் காகிதங்கள் கட்டி... தொப்புள் தெரிய தாவணியும்... ஒரு இன்ச் தடிமனுக்கு மேக்கப் இட்ட பெண்டிரும்... பஞ்சகச்சம் வேட்டி கட்டி தலைப்பகை கட்டிய ஆண்களும் சூழ கதாநாயகனும் கதாநாயகியும் தங்கள் காதலைத் தெரிவித்தோ... அல்லது காதலை எப்படியாவது கரை சேர்த்துவிடு தாயே என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டோ பாடிக் குத்தும்... கும்மாங் குத்து ஆட்டம்...

ஆனால் யதார்த்தம் அப்படியா... இதோ உங்களுக்காக... கொங்கு நாட்டின் ஒரு சிறு கிராமத்தில் கோவில் சாட்டி... பூக்கம்பம் நட்டு... அதை சுற்றி ஆடும் ஒரிஜினல் கொங்கு கிராமத்து ஆட்டம்...


4 comments:

sathishsangkavi.blogspot.com said...

நம்ம ஊர்க்காரரா

வாங்க வாங்க... நீங்களும் பதிவுலகிற்கு வந்து கம்மாங்குத்து குத்துங்க....

பழமைபேசி said...

கம்பஞ்சுத்தி ஆடுறதுன்னாலே ஒரு குதூகலந்தான்!!!

ஆறாம்பூதம் said...

வாங்க சங்கவி . வருகைக்கு நன்றி.

பதிவுலகத்தில் இப்போது தான் நாற்று நட்டிருக்கிறேன். பயிராக்கி செழிக்க ஆதரவு தரவும்.

ஆறாம்பூதம் said...

வாங்க பழமைபேசியாரே...
ஆமாங்ங் பழமை . அதுவும் முறைப்பொண்னுங்க ஆட்டத்தை வேடிக்க பார்த்தாங்ணா.. காலு பம்பரமால்ல ஆடும்...

Post a Comment