Saturday, June 25, 2011

காலத்தைப் புணர்தல்

மாட்டிறைச்சியின் சுகந்தமென்பதை

எந்த வார்த்தையில் விளக்கலாம் என

அவ்வை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்

வெள்ளைக் குளவியின் பீ

எதை எழுதினாலும்

எழுத்துகள் இப்படித்தான் பிரகாசித்தன

என்னை யாசித்தாலும் அது அப்படித்தானிருக்கும்

ராசேந்திரன் கண்ணீர் வெங்காயம்

நாற்றமெடுக்குமென

கி மு 851 ல் நான் சொன்னதை

நம்பாத மிஸ்டர் தஸ்தயேவ்ஸ்கி

பிரயோகித்த வசைச் சொல்லின்

மீளுருவாக்கமே சனநாயமென்பதை

இயலுணர தண்டி யாத்திரை போனதாக

காந்தி டைரிக் குறிப்பில்

குறித்து வைத்திருக்கிறார்

நம்ப முடியாதவர்கள் விளங்குவீராக

விவரிக்க முடியாத நிறங்களை

பெயரிட்டழைத்து

வீச்சை சுருக்கும் என்னமெனக்கில்லை

காலத்தைப் புணர்ந்தீர்களால்

உங்களுக்கு இது

புரியக் கூடும்

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புரிந்த மாதிரி இருக்கிறது ஆனால் புரியவில்லை...

ஆறாம்பூதம் said...

வருகைக்கு நன்றி சவுந்தர்

Post a Comment